திடீர் ஓய்வை அறிவித்த அவுஸ்திரேலிய கேப்டன்! ரசிகர்கள் அதிர்ச்சி
2015ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அவுஸ்திரேலிய அணியில் பின்ச் 45 ஓட்டங்கள் விளாசியிருந்தார்
2020ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரர் விருதை பின்ச் வென்றார்
அவுஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக 2013ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஆரோன் பின்ச், இதுவரை 145 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவுஸ்திரேலிய அணிக்காக 17 சதங்கள் அடித்துள்ள பின்ச், அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 5401 ஓட்டங்கள் குவித்துள்ள பின்ச், 30 அரைசதங்கள் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 153 ஆகும்.
PC: Reuters
அவுஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். கடைசியாக அவர் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை. நாளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியே அவரது கடைசி ஒருநாள் போட்டியாகும்.
PC: ICC/Twitter
எனினும், உலகக் கோப்பையில் விளையாடும் அவுஸ்திரேலிய அணியை பின்ச் வழி நடத்துவார். அதிரடி ஆட்டக்காரரான பின்ச் திடீர் ஓய்வு முடிவை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
PC: AFP