பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்த கனேடிய வீரர்! மிரட்டல் சாதனை
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ணப் போட்டியில் கனேடிய வீரர் ஆரோன் ஜான்சன் 52 ஓட்டங்கள் விளாசினார்.
சரிந்த விக்கெட்டுகள்
நியூயார்க்கில் கனடா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
பாகிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வென்று பந்துவீச்சை தெரிவு செய்ய, கனடா அணி முதலில் களமாடியது.
நவ்நீத் தலிவால் 4 ஓட்டங்களில் வெளியேற, பர்கத் (2), கிர்டோன் (1), மொவ்வா (2), ரவீந்தர்பால் சிங் (0) என மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன.
சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆரோன் ஜான்சன்
ஆனால், மறுமுனையில் ஆரோன் ஜான்சன் (Aaron Johnson) பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், தனது 6வது டி20 அரைசதத்தை விளாசினார்.
அவர் 44பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய கனடா அணி 7 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்கள் எடுத்தது.
ஹர்பஜன் சிங்கிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர்! இனவெறி கருத்து கூறியதற்கு வெளியிட்ட பதிவு
மொஹம்மது அமீர், ஹாரிஸ் ராஃப் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆரோன் ஜான்சன் கனடா அணிக்காக அதிக (8) அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.
Aaron John5️⃣0️⃣n spearheading our batting ?#PAKvCAN #weCANcricket #T20WorldCup
— Cricket Canada (@canadiancricket) June 11, 2024
? ICC/Getty pic.twitter.com/eHD0zrBlFN
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |