சேவாக் பெயரை கோஷமிட்டு ஆதரவளித்த பாகிஸ்தான் ரசிகர்கள்; ஆர்யவிர் சொன்ன தகவல்
aaryavir says pakistan fans supported by chanting sehwag: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில், ஆர்யவிர் காயமடைந்த போது பாகிஸ்தான் ரசிகர்கள் சேவாக்கின் பெயரை கோஷமிட்டு ஆதரவளித்ததாக தனது தந்தையிடம் ஆர்யாவிர் சேவாக் தெரிவித்துள்ளார்.
சேவாக் பெயரை கோஷமிட்ட பாகிஸ்தான் ரசிகர்கள்
மஸ்கட்டில் நடைபெற்ற U19 ஆசிய கிண்ண இறுதிப்போட்டியில், இந்திய அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டதை வென்றது.

இதில், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக், 58 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
மொத்தமாக இந்த தொடரில், 5 இன்னிங்ஸில் விளையாடிய ஆர்யவீர் சேவாக், 1 சதம், 3 அரைசதங்கள் உட்பட 361 ஓட்டங்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார்.

வெற்றிக்கு பின்னர் போட்டியின் போது நிகழ்ந்த அனுபவங்களை ஆர்யவீர் தனது தந்தையிடம் வீடியோ காலில் பகிர்ந்து கொண்டார். அந்த வீடியோவை சேவாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதில் பேசிய ஆர்யவீர், "கடைசி ஓவரின் போது, நான் 'சீதா ராம், சீதா ராம்' என்று கோஷமிட்டுக்கொண்டே இருந்தேன். எப்படியாவது ஒரு பவுண்டரி கிடைத்துவிடும் என்று நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், அது கடைசிப் பந்தில் கிடைத்தது.
எனக்கு 2 முறை காயம் ஏற்பட்டபோது, பிசியோ வந்தார். பாகிஸ்தான் பார்வையாளர் மாடத்தில் இருந்து சுமார் 2000 பாகிஸ்தானியர்கள் 'சேவாக், சேவாக்' என்று கத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கூட ஆதரவளித்தார்கள்" என தெரிவித்தார்.