160 ஓட்டங்கள் விளாசிய சேவாக்கின் மகன் ஆர்யவீர்: இந்தியா U19 அபார வெற்றி
India U19 beat UAE U19 by 70 runs: இந்தியா U19 அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
U19 ஆசிய கிண்ணத் தொடர் போட்டியில், இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது.
ஆர்யவீர் சேவாக்
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுக்கு இடையிலான U19 ஆசிய கிண்ணத் தொடர் போட்டி அல் அமீகரத்தில் நடந்தது.

முதலில் ஆடிய இந்தியா U19 அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 309 ஓட்டங்கள் குவித்தது.
ஆர்யவீர் சேவாக் (Aaryavir Sehwag) 7 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 160 ஓட்டங்கள் விளாசினார்.
ஆட்டநாயகன்
VK வினீத் 69 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்தார். நஸீம் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்களில் 239 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அகமது குதாதத் 74 ஓட்டங்கள் எடுத்தார். இஷான் சூட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா U19 அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ஆர்யவீர் சேவாக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
