சேவாக் மகன் ஆர்யவீரின் அதிரடி ஆட்டம்; விக்கெட் இழப்பின்றி இந்தியா வெற்றி
aaryavir sehwag 70 india beat nepal by 10 wickets: U19 ஆசிய கிண்ண தொடரில், நேபாளத்திற்கு எதிரான போட்டியில், ஆர்யவீர் சேவாக்கின் அதிரடி ஆட்டத்தில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றுள்ளது.
U19 ஆசிய கிண்ணம்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ண தொடர் ஓமனில் நவம்பர் 5 ஆம் திகதி நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நேபாளம் அணி, 42.3 ஓவர்களில் 128 ஓட்டங்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக தர்ஷ் சோனார் 43 ஓட்டங்கள் குவித்தார்.

இந்தியா தரப்பில் Arjun Rajput மற்றும் Ishan Dheeraj Sood தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.
ஆர்யவீர் சேவாக் அதிரடி
129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 129 ஓட்டங்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் 52 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 70 ஓட்டங்கள் குவித்தார்.

அணித்தலைவர் Lakshya Raichandani 53 ஓட்டங்கள் குவித்தார்.
இந்தியா தனது அடுத்த போட்டியில், நவம்பர் 8 ஆம் திகதி பாகிஸ்தானை எதிர்த்து விளையாட உள்ளது.