19 பவுண்டரி, 8 சிக்ஸர்கள்; 173 ஓட்டங்கள் விளாசிய சேவாக்கின் மகன் ஆர்யவிர்
aaryavir sehwag smashes 173 runs vs chandigarh u19: சேவாக்கின் மகன்ஆர்யவிர் சேவாக், ண்டிகர் U19 அணிக்கு எதிரான போட்டியில், 173 ஓட்டங்கள் விளாசி அதிரடி காட்டியுள்ளார்.
173 ஓட்டங்கள் விளாசிய சேவாக்கின் மகன் ஆர்யவிர்
வினூ மங்கட் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில், டெல்லி U19 மற்றும் சண்டிகர் U19 அணிகள் மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய டெல்லி அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 289 ஓட்டங்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவிர் சேவாக், அதிரடியாக ஆடி 143 பந்துகளில் 19 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட 173 ஓட்டங்கள் குவித்தார்.
290 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சண்டிகர் U19 அணி, 41.3 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 293 ஓட்டங்கள் குவித்தது.
சண்டிகர் தரப்பில் ரூபேஷ் யாதவ் 167 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
சண்டிகர் U19 அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.