நடிப்பை விட்டு விலகிய பிரபல நடிகை... ரூ. 820 கோடி நிறுவனத்தை நிறுவியது எப்படி?
20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சி துறையில் ஒரு பகுதியாக இருந்த ஆஷ்கா ஏப்ரல் 2021 இல் தனது நடிப்பு வாழ்க்கையில் இருந்து விடைப்பெற்று, தனன்கென ஒரு நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
யார் இந்த நடிகை ஆஷ்கா கொராடியா
2002 ஆம் ஆண்டு Achanak 37 Saal Baad என்ற நிகழ்ச்சியுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். மற்றும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொடரில் நடித்தார்.
பின் 2019 ஆம் ஆண்டில் நடிப்பில் இருந்து வெளியேறினார்.
தொழிலதிபரானது எப்படி ?
2020 ஆம் ஆண்டில் இவர் தனது ஒப்பனை மற்றும் அழகு பிராண்டான Renee Cosmetics -ஐ அறிமுகப்படுத்தினார்.
நடிகையாக மாறிய தொழிலதிபர் தனது கல்லூரி நண்பர்களான பிரியங்க் ஷா மற்றும் அசுதோஷ் வலானி ஆகியோருடன் சேர்ந்து இந்நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இரண்டே ஆண்டுகளில், அவரது ஒப்பனை பிராண்டான Renee Cosmetics ரூ. 820 கோடியை பெற்றது.
அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் கடந்த ஆண்டு 25 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.
அவர்களின் நிறுவனத்தில் 200 தயாரிப்புகள் உள்ளன.
இது Amazon, Flipkart, Nykaa மற்றும் Myntra ஆகியவற்றில் கிடைக்கிறது.
மேலும் இது 650க்கும் மேற்பட்ட கடைகளிலும் கிடைக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |