வீடே மணக்கும் ஆட்டுக்கால் பாயா செய்வது எப்படி?
Ginger
Green Chilli
Onion
By Kirthiga
ஆட்டுக்கால் பாயா கறி தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவு வகையாகும், இது தென்னிந்தியாவில் உள்ள முஸ்லிம்களால் விரும்பப்படுகிறது.
இது பெரும்பாலும் காலை உணவாக பரோட்டா அப்பம் உடன் சாப்பிடப்படுகிறது. இதை எப்படி இலகுவாகவும் சுவையாகவும் வீட்டிலேயே செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
வேக வைக்க
-
ஆட்டுக்கால் - 4
-
வெங்காயம் - 3
- தக்காளி - 2
- பச்சை மிளக்காய் - நான்கு
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 மேசைக்கரண்டி
-
மிளகு தூள் - 2 தேக்கரண்டி
- தனியாத்தூள் - 2 மேசைகரண்டி
- உப்பு - தே. அளவு
- தேங்காய் - அரை மூடி
தாளிக்க
-
எண்ணெய்
- பட்டை, ஏலம், கிராம்பு - சிறிதளவு
-
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
- கொத்தமல்லி - ஒரு கொத்து
- புதினா - சிறிதளவு
செய்முறை
-
முதலில் வெங்காயம், தக்காளியை நறுக்கி, தேங்காயை அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்து ஒரு குக்கரில் ஆட்டுக்கால் , நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு , மிளகு தூள், தனியா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறிக்கொண்டே தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும் வரை 15 நிமிடம் வரை வேக வேண்டும்.
- விசில் அடித்ததும் அதில் தேங்காய் விழுதை போட்டு கொதிக்கவிடவும்.
-
வேறு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து, அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சிபூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி, புதினா சேர்த்து கொதித்து கொண்டிருக்கும் ஆட்டு கால் பாயாவில் கொட்டி இறக்கினால் சுவையான ஆட்டுக்கால் பாயா ரெடி!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US