ஆயுத பூஜை: இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் பெருகுமாம்!
பெண் தெய்வங்களை கொண்டாடும் நவராத்திரி விரதமானது இவ்வருடம் அக்டோபர் 15 தொடங்கி வருகிற செவ்வாய்க்கிழமை நிறைவுப்பெறவுள்ள நிலையில், நாளை ஆயுத பூஜை நடைபெறவிருகின்றது.
இன்றைய நாளில் எந்த நேரத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நவராத்திரி
ஒவ்வொரு வருடமும் இந்த காலத்திற்காக காத்திருப்பது சைவர்களின் விருப்பம் என்றே கூறலாம். வருகின்ற 9 நாட்களும் திருவிழா போன்று கொழு வைத்து வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களின் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபடுகிறோம்.
இந்த விரதக்காலத்தில் தெய்வத்திற்கு படைப்பதற்கு ஒவ்வொரு ஒழுங்குமுறைகள் இருகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் வீற்றிருக்கும் கடவுள் 9 நாட்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்பது ஐதீகம்.
பலர் வீட்டில் நவதானியம் முளைக்க வைத்து வழிப்படுவதும் வழக்கம். அந்தவகையில் நாளைய தினம் ஆயும் பூஜை நடைபெறவருகின்றது.
ஆயுத பூஜை
நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் அனைத்து தெய்வங்களிடம் இருந்தும் பெற்ற ஆயுதங்களுக்கு அன்னை பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. ஆகவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து வழிப்படுவதும் இந்நாளில் வழக்கமாகும்.
பூஜை செய்யும் நேரம்
ஆயுதங்களுக்கு பூஜை செய்வதற்குரிய முகூர்த்த நேரமாக அக்டோபர் 23 ம் தேதி பகல் 12.30 முதல் 2 மணி வரை நல்ல நேரமாக பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
சரஸ்வதி பூஜை செய்ய மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நல்ல நேரம் மற்றும் விஜயதசமி பூஜை செய்வதற்கான நல்ல நேரமாக காலை: 07.45 முதல் 08.45 மணி வரையிலும் காலை: 10.45 முதல் 11.45 மணி வரையிலும் செய்யலாம் என பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |