அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ்! உருக்கமாக வெளியிட்ட பதிவு
அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஏபி டி வில்லியர்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் மிகப்பெரிய ஜாம்பவானாக திகழ்கிறார் தென்னாப்பிரிக்காவின் 360 டிகிரி ஏபி டி வில்லியர்ஸ்.
இவர் 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8765 ரன்களை குவித்துள்ளார். 228 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9577 ரன்களை குவித்துள்ள அவர் 78 டி20 போட்டிகளில் விளையாடி 1672 ரன்களை எடுத்துள்ளார்.
இதோடு ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த டி வில்லியர்ஸ் 5162 ரன்களை குவித்திருக்கிறார்.
இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக டி வில்லியர்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் நான் விளையாட்டை முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாடினேன். இப்போது, 37 வயதில், அந்தச் சுடர் அவ்வளவு பிரகாசமாக எரிவதில்லை என பதிவிட்டுள்ளார்.
It has been an incredible journey, but I have decided to retire from all cricket.
— AB de Villiers (@ABdeVilliers17) November 19, 2021
Ever since the back yard matches with my older brothers, I have played the game with pure enjoyment and unbridled enthusiasm. Now, at the age of 37, that flame no longer burns so brightly. pic.twitter.com/W1Z41wFeli