சிறந்த ஐபிஎல் அணியை உருவாக்கிய நட்ச்த்திர வீரர் ஏபி டிவிலியர்ஸ்.. ஜாம்பவான் மலிங்காவுக்கு இடமில்லை! அணியின் முழு விபரம்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவானும், ஐபிஎல்லில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வீரருமான ஏபி டிவிலியர்ஸ் சிறந்த ஐபிஎல் XI அணியை உருவாக்கியுள்ளார்.
சிறந்த ஐபிஎல் XI அணியில் துவக்க வீரராக சேவாக்கை தேர்வு செய்துள்ளார்.
மற்றொரு ஓபனருக்கான இடத்தை, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பை வென்றுகொடுத்த ரோஹித் ஷர்மாவுக்கு வழங்கியுள்ளார். மூன்றாவது இடத்தில் இந்திய அணிக் கேப்டன் விராட் கோஹ்லியின் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதில் ஆச்சரிய விடயமாக மும்பை இந்தியன்ஸ் ஜாம்பவானான பந்துவீச்சாளர் லசித் மலிங்காவின் பெயரும், சென்னை அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா பெயரும் இடம்பெறவில்லை.
டிவிலியர்ஸ் ஐபிஎல் அணி முழு விபரம்
விரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன், ஸ்டீவன் ஸ்மித், ஏபி டிவிலியர்ஸ், பென் ஸ்டோக்ஸ், மகேந்திரசிங் டோனி (தலைவர்), ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பரீத் பும்ரா, காகிசோ ரபாடா.