கோஹ்லி உண்மையான ஜாம்பவான்! ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற விராட் கோஹ்லியை புகழ்ந்து ஏபி டி வில்லியர்ஸ் புகழாரம் பதிவிட்டுள்ளார்.
ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோஹ்லி (Virat Kohli) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தது ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனினும் பலரும் கோஹ்லிக்கு பிரியாவிடை அளித்து பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸும் (AB De Villiers) அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
உண்மையான ஜாம்பவான்
தனது எக்ஸ்தள பக்கத்தில் ஏபி டி வில்லியர்ஸ், "எனது பிஸ்கோட்டி கோஹ்லிக்கு ஒரு அற்புதமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்! உங்கள் உறுதியும், திறமையும் எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்துள்ளன. உண்மையான ஜாம்பவான்!" என தெரிவித்துள்ளார்.
விராட் கோஹ்லியும், ஏபி டி வில்லியர்ஸும் இணைந்து 229 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் (2016யில்) அமைத்து சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Congrats to my biscotti @imVkohli on an epic Test career! Your determination & skill have always inspired me. True legend! ❤️🙌🏻 #ViratKohli𓃵 pic.twitter.com/2DnNLRzSrI
— AB de Villiers (@ABdeVilliers17) May 12, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |