டெஸ்டில் இதுவரை பார்க்காத மிகச்சிறந்த ஆட்டம் இது! பண்ட், ஜடேஜாவை புகழ்ந்து தள்ளிய ஏபிடி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஆட்டம் இதுவரை கண்டிராதது என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் புகழ்ந்துள்ளார்.
பர்மிங்காமில் நடந்து இந்தியா-இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் சென்றுகொண்டிருக்கிறது. முதல் இன்னிங்சில் புஜாரா, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சொதப்பிய நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ரிஷப் பண்ட் 146 ஓட்டங்களும், ரவீந்திர ஜடேஜா 104 ஓட்டங்களும் விளாசினர். இவர்களின் ஆட்டத்தினை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
PC: Reuters/ Jason Cairnduff
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கிரிக்கெட்டின் பெரும்பாலான அதிரடி ஆட்டங்களை தவற விடுகிறேன், வீட்டிற்கு செல்லவில்லை. போட்டியின் சிறப்பான தருணங்களை பார்த்து முடித்துவிட்டேன். பண்ட் மற்றும் ஜடேஜாவிடம் இருந்து சிறப்பான கூட்டு எதிர்த்தாக்குதல். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை கண்டிராத சிறப்பான ஆட்டம் இது!' என தெரிவித்துள்ளார்.
Haven’t been home and missed most of the Cricket action. Finished watching the highlights now. That counterattack partnership from @RishabhPant17 and @imjadeja is right up there with the best I’ve ever seen in Test Cricket!
— AB de Villiers (@ABdeVilliers17) July 4, 2022
PC: BCCI