எல்லா திசையிலும் பறந்த சிக்சர்கள்! 46 பந்துகளில் 104 ரன்கள் குவித்த மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ்! மிரட்டலான வீடியோ காட்சி
ஐபிஎல் 2021ன் 2வது சுற்று சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் பயிற்சி ஆட்டத்தில் ஏ.பி.டிவிலியர்ஸ் 46 பந்துகளில் 104 ரன்களை விளாசியுள்ளார்.
ஐபிஎல் 2021-ன் 2வது சுற்று ஆட்டங்கள் எமிரேட்ஸில் 19ம் திகதி முதல் தொடங்குகிறது. இதனையடுத்து ஐபிஎல் அணிகள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
தங்கள் அணிக்குள்ளேயே அணி பிரித்து பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகின்றன அந்த வகையில் ஆர்சிபி ஏ அணி - ஆர்சிபி பி அணிகள் மோதியது.
முதலில் பேட்டிங் செய்த ஏ அணி 4 விக்கெட்களை இழந்து 212 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மிஸ்டர் 360 டிகிரி டிவிலியர்ஸ் 10 சிக்சர்கள் 6 பவுண்டரிகளுடன் 46 பந்துகளில் 104 ரன்கள் விளாசினார்.
இவர் சதம் அடிக்கும்போது ஹர்ஷல் படேல் உள்ளிட்டவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். இவருடன் மொகமட் அசாருதின் 43 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். இந்த போட்டியில் ஆர்சிபி பி அணி தான் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Bold Diaries: RCB’s Practice Match
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 15, 2021
AB de Villiers scores a century, KS Bharat scores 95 as batsmen make merry in the practice match between Devdutt’s 11 and Harshal’s 11.#PlayBold #WeAreChallengers #IPL2021 pic.twitter.com/izMI4LCSG1