இது மிகவும் மோசமான விதி! ஐசிசியை விளாசிய ஜாம்பவான் வீரர் டிவில்லியர்ஸ்
மோசமான வெளிச்சம் காரணமாக டெஸ்டின் கடைசி நாளில் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தக் கூடாது என்ற ஐசிசி-யின் விதியை ஏபி டி வில்லியர்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.
ஐசிசி விதி
கராச்சியில் நடந்த பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இறுதி நாளின் கடைசி கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்களே தேவை என்ற நிலையில் ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது.
ஐசிசி விதியின் படி, மங்கலான வெளிச்சத்தினால் பீல்டிங் அணியின் கேப்டன் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக அவர் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்த விரும்பினால் மைதானத்தை விட்டு வெளியேறலாம். போட்டி டிரா என அறிவிக்கப்படும். பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியிலும் இதே தான் நடந்துள்ளது.
@AFP
வேகப்பந்து வீச்சாளர்களை பந்துவீச அனுமதிக்க முடியாது என்று நடுவர்கள் ஏற்கனவே கூறியிருந்தபோது, பாகிஸ்தானின் வெற்றிக்கு 3 ஓவர்களில் 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலை இருந்தது.
ஏபி டி வில்லியர்ஸ் கண்டனம்
இந்த நிலையில், ஐசிசி விதியினை தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கடுமையாக விளாசியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'imo விதிமுறை புத்தகத்தின் மற்றொரு மோசமான சிறிய பகுதி. மோசமான வெளிச்சம் காரணமாக, பீல்டிங் அணியிடம் சுழற்பந்து வீச்சை மட்டுமே பயன்படுத்தி ஓவர்களை வீசி முடிக்குமாறு நடுவர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள், ஆனால் வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தினால் அவர்கள் எந்த நேரத்திலும் போட்டியை முடிக்க முடியும்' என தெரிவித்துள்ளார்.