இலங்கையின் அற்புதமான சாதனைக்கு வாழ்த்துக்கள் தோழர்களே! தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்
இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ்
கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இலங்கை வீரர்கள்
ஆசியக் கோப்பையை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்களுடன் பாராட்டுகளையும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆசியக் கோப்பை தொடரை வென்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இலங்கை அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இலங்கை அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், 'இலங்கை அணியின் அற்புதாமான சாதனை கூச்சலிடச் செய்கிறது. அவர்களின் பயிற்சியாளர் ஒருவரின் வார்த்தைகளில் இருந்து, ''கடினமான காலங்கள் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள் அதனை செய்கிறார்கள்''. வாழ்த்துக்கள் தோழர்களே' என குறிப்பிட்டுள்ளார்.
PC: Getty Images
இந்த வெற்றியை இலங்கை வீரர்கள் சமூக வலைதள பக்கங்களில் கோப்பையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
#AsiaCup2022 ???? pic.twitter.com/k0h8TGEljl
— Kusal Mendis (@KusalMendis13) September 12, 2022