முதல் பந்திலேயே கிளீன் போல்ட் ஆன டிவில்லியர்ஸ்! யார்க்கரில் கால்கள் திணறி தடுமாறியதை கவனிச்சீங்களா? வைரல் வீடியோ
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆன டிவில்லியர்ஸ் தலையை தொங்க போட்டு கொண்டு அதிர்ச்சியுடன் வெளியேறிய நிலையில் அவர் அவுட்டான வீடியோ வைரலாகியுள்ளது.
விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 14-வது ஐபிஎல் தொடரின் முதலாவது பாதியில் சிறப்பான துவக்கத்தை பெற்றிருந்தது. முதல் பாதி தொடரில் 7 போட்டிகளில் விளையாடி இருந்த அந்த அணி 5 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாமிடத்தில் இருந்தது.
இந்நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தில் கொல்கத்தா அணியை சந்தித்த பெங்களூரு அணி படுதோல்வியடைந்தது.
— Simran (@CowCorner9) September 20, 2021
இப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரமான ஏ.பி.டி களத்திற்கு வந்ததும் நிச்சயம் ஒரு நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏ.பி.டி வந்த வேகத்தில் கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
கொல்கத்தா அணியின் ஆல்ரவுண்டர் ரசல் ஏ.பி.டி யை க்ளீன் போல்டாக்கினார்.
முதல் பந்திலேயே தனது சரியான யார்க்கர் மூலம் ஸ்டெம்பை பதம் பார்த்தார்.
அப்போது களத்தில் கால்கள் தடுமாறியபடி நின்றார் டிவில்லியர்ஸ். பின்னர் அதிர்ச்சியும், வருத்தமும் கலந்த முகத்துடன் அவர் வெளியேறினார்.