ஜாம்பவான் டி வில்லியர்ஸ் ஓய்வை மோசமாக கிண்டலடித்து வீடியோ வெளியிட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்! கொந்தளித்த ரசிகர்கள்
தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸின் ஓய்வை சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் கிண்டல் செய்த நிலையில் ரசிகர்கள் கோபமடைந்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவனாக விளங்கி வரும் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று முன் தினம் அறிவித்தார்.
அவரின் இந்த அறிவிப்பால் ஒருபுறம் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில் மற்றொருபுறம் வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் டிவில்லியர்ஸை கிண்டலடித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளராக செயல்பட்டு வந்தவர் பர்விந்தர் அவானா. அவர் டிவ்ல்லியர்ஸ் குறித்து பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். 2013ம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவிலியர்ஸ் விளையாடியபோது, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பர்விந்தர் அவானா விளையாடினார்.
Thank you @ABdeVilliers17 for your contribution to cricket. pic.twitter.com/orFEXsFjnB
— Parvinder Awana (@ParvinderAwana) November 19, 2021
அப்போது நடைபெற்ற ஒரு போட்டியில் ஏபி டிவிலியர்ஸை பர்விந்தர் கிளின் போல்ட் ஆக்கியிருந்தார். அந்த வீடியோவை பதிவிட்டு "கிரிக்கெட்டிற்கு நீங்கள் அளித்த பங்களிப்புக்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக தொடங்கியதை அடுத்து, ரசிகர்கள் பலரும் பர்விந்தருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்