லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் குப்பைகளாக குவிந்து கிடக்கும் ஆணுறைகள், அழுக்கு உள்ளாடை, பீர் பாட்டில்கள்! வெளியான புகைப்படங்கள்
லண்டனில் கொரோன கட்டுப்பாடுகளுடன் தேம்ஸ் நதிக்கரையில், நடந்த விழாவில் பங்கேற்ற விழா ஏற்பாட்டாளர்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்களை அப்படியே விட்டுச் சென்றது, விழா ஏற்பாட்டாளர்களை கடும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பல்வேறு விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதில் தேம்ஸ் நதிக்கரையில் நடைபெறும் இசைநிகழ்ச்சியும் ஒன்று, இதையடுத்து இந்தாண்டு கொரோனா கட்டுபாடுகளுடன் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவிற்கு வரக்கூடிய ஆணோ அல்லது பெண்ணோ தங்களுடைய துணையை அழைத்துக் கொண்டு வருவார்கள். அப்போது அவர்கள் உடன் தற்காலிக டென்ட் கொட்டகை அமைப்பதற்கான பொருட்களுடன் வருவார்கள்.
மூன்று நாட்களாக இசையை வாசித்துக் கொண்டே தேம்ஸ் நதிக்கரையில் தங்களது ஜோடிகளுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஓரினச்சேர்க்கையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். அதன் படி, இந்த ஆண்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருவிழாவின் ஒருங்கிணைப்பாளர் லில்லி ராபின்ஸ், தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளதால் இசை விழாவில் பங்கேற்பவர்கள் கட்டாயம் தடுப்பூசி சான்று வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. விழா முடிந்தவுடன் தங்கள் உடமைகளை எடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தினோம்.
ஆனால், பலர் அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டனர். ஆயிரக்கணக்கான கூடாரங்களில் முகாமிட்டிருந்த அவர்கள், தாங்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் கூடாரங்கள், அழுக்கான உள்ளாடை, பயன்படுத்தப்பட்ட ஆணுறை, நைட்ரஸ் ஆக்சைடு குப்பிகள், செக்ஸ் மருந்துகளின் பைகள், ஐபோன்கள், பாஸ்போர்ட், ஆண்குறி பலூன்கள், பெக்லெஸ், சுய இன்ப கருவிகள், உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை அப்படியே போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
கிட்டதிட்ட ஆறு மைதானங்களில் விழாக்கள் நடந்ததால், ஒவ்வொரு கூடாரத்திலும் சுமார் 25 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அள்ளியுள்ளோம். அப்படி மொத்தமாக பார்த்தால், கிட்டதட்ட 875 டன் பிளாஸ்டிக் குப்பை கிடைக்கும்.
இவற்றை எரிப்பதால் வெளியேறும் கார்பன்டை ஆக்சைடில் இருந்து மாசு ஏற்படும். இவை முழுமையாக சிதைவதற்கு 10,000 ஆண்டுகள் வரை ஆகும். இதனால் இவற்றை மறுசுழற்சி செய்யும் ஆலை நிர்வாகத்தினரிடம் பேசியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பலமுறை எச்சரித்தும், விழாவிற்கு வந்தவர்கள் இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது தான் சற்று வேதனை என்று தெரிவித்துள்ளார்.