கைவிட்ட அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும்... இந்தியா பக்கம் பார்வையை திருப்பும் பிரான்ஸ்
நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவும், தொழில்முறைக் கூட்டாளியான அவுஸ்திரேலியாவும் கைவிட்ட நிலையில், தற்போது பிரான்சின் பார்வை இந்தியாவை நோக்கித் திரும்பியுள்ளது.
நீர் மூழ்கிக்கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் பிரான்சுடன் கையோப்பமிட்டிருந்த அவுஸ்திரேலியா திடீரென பிரான்சைக் கைகழுவ, சந்தர்ப்பம் பார்த்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவுஸ்திரேலியாவுடன் நீர் மூழ்கிக்கப்பல் தயாரிப்பு ஒன்றிற்காக கைகோர்த்துக்கொண்டன.
நட்பு நாடுகள் இப்படி செய்யும் என சற்றும் எதிர்பாராத பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அவுஸ்திரேலியா செய்தது துரோகம் என கொந்தளித்தார்.
நட்பு நாடுகள் கைவிட்ட நிலையில், பிரான்சின் பார்வை தற்போது இந்தியா பக்கம் திரும்பியுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட இமானுவல் மேக்ரான், இந்தோ பசிபிக் பகுதியில் தங்கள் கூட்டுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த தகவலை பிரான்ஸ் ஜனாதிபதியின் அலுவலகம் உறுதி செய்துள்ளது.
அத்துடன், பிரான்சுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஐரோப்பிய ஒன்றியமும், சீனா தொடர்ந்து பெரும் பாதுகாப்பு தொடர்பிலான அச்சுறுத்தலாக மாறிவரும் நிலையில், இந்தோ பசிபிக் பகுதியில் அதிக கூட்டுறவும் குறைந்த பிளவுகளும் தேவை என்று கூறியுள்ளது.