கோலியின் 100வது போட்டியில் வெற்றி! வாழ்த்து கூறிய மிஸ்டர் 360
100வது போட்டியை சிறப்பாக முடித்ததாக கோலியை பாராட்டிய ஏபி டி வில்லியர்ஸ்
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை கொண்டாடும் இந்திய ரசிகர்கள்
இந்திய அணி வெற்றி பெற்றதற்கு தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
PC: Twitter
தனது 100வது போட்டியில் விளையாடிய விராட் கோலி 35 ஓட்டங்கள் விளாசினார். மேலும் இந்திய அணி வெற்றி பெற்றதை கோலியின் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த இந்தியர்களும் கொண்டாடி வருகின்றனர்.
PC: Twitter
நேற்றைய போட்டி குறித்து தென் ஆப்பிரிக்காவின் அதிரடி மன்னன் ஏபி டி வில்லியர்ஸ் கூறுகையில், 'மிகச் சரியான கிரிக்கெட் போட்டி இது! இரண்டு தரமான பந்துவீச்சு தாக்குதலுடன் கூடிய தந்திரமான விக்கெட். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் மற்றும் 100வது போட்டியை சிறப்பாக முடித்த கோலிக்கும் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
PC: Twitter (KKRiders)