பரபரப்பான போட்டியில் இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்
காலேவில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷாபிக் சதம் அடித்துள்ளார்.
இலங்கை அணி நிர்ணயித்த 342 ஓட்டங்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 35 ஓட்டங்களிலும், அசார் அலி 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில் அப்துல்லா ஷாபிக் சதம் மற்றும் பாபர் அசாம் ஜோடி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறது.
இதில் நிதானமாக ஆடி சதம் அடித்துள்ளார். இது அவருக்கு இரண்டாவது டெஸ்ட் சதம் ஆகும். அவருக்கு உறுதுணையாக விளையாடி வரும் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்துள்ளார்.
PC: Twitter (@TheRealPCB)
இருவரும் 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். இந்த ஜோடியை பிரிக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் திணறி வருகின்றனர்.
தற்போது வரை பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இன்னும் அந்த அணியின் வெற்றிக்கு 138 ஓட்டங்கள் தேவை.
PC: Twitter (@TheRealPCB)