மே.தீவுகளுக்கு எதிராக சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர்: பாபர் அஸாம் அதிரடி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணி 266 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் 344 ஓட்டங்கள்
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் நடந்து வருகிறது.
மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 344 ஓட்டங்கள் குவித்தது. ஜஸ்டின் க்ரீவ்ஸ் 73 ஓட்டங்களும், ரோஸ்டன் சேஸ் 70 ஓட்டங்களும் எடுத்தனர்.
சஜித் கான் 4 விக்கெட்டுகளும், மொஹம்மது அலி, உபைத் ஷா மற்றும் அலி உஸ்மான் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ஓட்டங்கள் எடுத்தது.
அஸான் அவைஸ் 55 (71) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்க, அப்துல்லா ஷாஃபிக் 107 ஓட்டங்களுடனும், அதிரடி காட்டிய பாபர் அஸாம் (Babar Azam) 86 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |