அப்துல் கலாம் பாராட்டிய மாம்பழ கட்டுரை.., நினைவு கூர்ந்த சுதா மூர்த்தி
நான் எழுதிய கட்டுரைகளை படித்து போன் செய்து அப்துல் கலாம் பாராட்டியதாக மாநிலங்களவை எம்.பி சுதா மூர்த்தி நினைவு கூர்ந்துள்ளார்.
பாராட்டிய அப்துல் கலாம்
இன்போசிஸ் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி (73) பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.
இவர் கடந்த 2006 -ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பத்ம ஸ்ரீ விருது பெற்ற படத்தை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அவரிடம் இருந்து தனக்கு வந்த போன் அழைப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார். அவர் அதில், "எனக்கு ஒரு நாள் ஒரு போன் அழைப்பு வந்தது. அப்துல்கலாம் உங்களிடம் பேச விரும்புகிறார் என்று ஆபரேட்டர் கூறினார்.
அப்போது நான் ராங் கால் என்று நினைக்கிறேன் என்று கூறினேன். எனக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை. எனது கணவர் நாராயண மூர்த்திக்கு வந்திருந்த அழைப்பாக இருக்கலாம். அவருக்கு பதிலாக என்னிடம் தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்றேன்.
அதற்கு அப்துல் கலாம் குறிப்பாக உங்களிடம் தான் பேச விரும்புகிறார் என்று ஆபரேட்டர் கூறினார். பின்னர் தயக்கத்துடன் தொடர்ந்து பேசினேன்.
அப்போது பேசிய அப்துல் கலாம் ‘ஐடி டிவைட்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்றும், தொடர்ந்து என்னுடைய கட்டுரைகளை படிப்பதாகவும் கூறினார்.
நான் கடைக்கு சென்ற போது மாம்பழ வியாபாரி ஒருவர் என்னிடம் 1 டஜன் பழங்கள் ரூ.100 என்றும், எனது ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மாணவி ஒருவருக்கு ரூ.200 க்கு விற்றது குறித்து அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் நீங்கள் பள்ளி ஆசிரியை, அந்த பெண்ஐ.டி. நிறுவனத்தில் அதிக சம்பளம் பெறுகிறார். அதனால் அவருக்கு ரூ.200-க்கு விற்றேன் என்றார்.
இதனை நான் எனது கட்டுரையில் எழுதி இருந்தேன். இது பற்றி படித்து தான் அப்துல் கலாம் என்னை பாராட்டினார்" என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |