அதிரடியாக 232 ஓட்டங்கள் விளாசல்! ருத்ர தாண்டவம் ஆடிய இளம் வீரர்
22 வயதான ஷாஃபிக் 7 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 736 ஓட்டங்கள் குவித்துள்ளார்
சென்ட்ரல் பஞ்சாப் 428 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, சிந்த் அணி தனது முதல் இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளது
பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் டெஸ்ட் போட்டி ஒன்றில் 232 ஓட்டங்கள் விளாசினார். பாகிஸ்தானில் உள்ளூர் டெஸ்ட் போட்டி தொடர் நடந்து வருகிறது.
அபோட்டபாத் மைதானத்தில் நடந்து வரும் டெஸ்டில் சென்ட்ரல் பஞ்சாப் மற்றும் சிந்த் அணிகள் மோதி வருகின்றன. சென்ட்ரல் பஞ்சாப் அணி தனது முதல் இன்னிங்சில் 428 ஓட்டங்கள் குவித்தது.
AFP/Getty Images
அந்த அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் அதிரடியாக விளையாடினார். பவுண்டரிகளை விரட்டிய அவர் அபாரமாக இரட்டை சதம் அடித்தார்.
ஷாஃபிக் சிக்ஸர்களை விளாசவும் தவறவில்லை. மொத்தம் 263 பந்துகளை எதிர்கொண்ட அவர், 4 சிக்ஸர்கள் மற்றும் 28 பவுண்டரிகளுடன் 232 ஓட்டங்கள் குவித்தார்.
AFP