சிக்ஸர் அடித்து சதம் விளாசல்! சொந்த மண்ணை முத்தமிட்ட வீரர் (வீடியோ)
பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷாஃபிக் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் விளாசினார்.
அப்துல்லா ஷாஃபிக்
முல்தானில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
அணித்தலைவர் ஷான் மசூட் (Shan Masood), தொடக்க வீரர் அப்துல்லா ஷாஃபிக் (Abdullah Shafique) இருவரும் சதம் விளாசினர்.
6️⃣ hit to reach 1️⃣0️⃣0️⃣ ?
— Pakistan Cricket (@TheRealPCB) October 7, 2024
Star batter Abdullah Shafique ?#PAKvENG | #TestAtHome pic.twitter.com/Ss5xyM4Cq4
20வது டெஸ்டில் விளையாடும் அப்துல்லா ஷாஃபிக்கிற்கு இது 5வது டெஸ்ட் சதம் ஆகும். அவர் சிக்ஸர் அடித்து சதத்தை பதிவு செய்தார். பின்னர் சொந்த மண்ணில் சதம் விளாசியதற்காக மைதானத்தை முத்தமிட்டார்.
பார்ட்னர்ஷிப்
அப்துல்லா ஷாஃபிக்-ஷான் மசூட் கூட்டணி 253 ஓட்டங்கள் குவித்தனர். இதன்மூலம் 4வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த பாகிஸ்தான் கூட்டணி எனும் சாதனை படைத்தனர்.
மேலும், முல்தான் மைதானத்தில் எடுக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும். இதற்கு முன் சேவாக் - டெண்டுல்கர் கூட்டணி 336 ஓட்டங்கள் குவித்ததே இந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஸ்கோர் ஆகும்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |