பிரித்தானியாவை வாட்டும் வெப்ப அலை: தண்ணீரில் இறங்கிய நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்
பிரித்தானியாவில் நிலவும் வெப்ப அலைகளுக்கு மத்தியில் வேல்ஸ் கடற்கரையில் தண்ணீரில் இறங்கிய 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
50 வயது நபருக்கு ஏற்பட்ட பரிதாபம்
நேற்று பிற்பகல் 4.25 மணியளவில் வேல்ஸின் நீத் போர்ட் டால்போட் பகுதியில் உள்ள Aberavon கடற்கரை பகுதியில் தண்ணீருக்குள் இறங்கிய 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெற்கு வேல்ஸ் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மற்றும் அவசர மருத்துவ சேவை குழுவினர் சம்பந்தப்பட்ட நபரை மீட்டு முதலுதவி(CPR) சிகிச்சையை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாலை 5 மணிக்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவர் சில்ஃப்ரூ பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
50 வயது நபர் உயிரிழந்த சம்பவத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு இது தொடர்பான தகவல்கள் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |