பல மருத்துவமனைகள்.. ஏராளமான முதலீடுகள்: ரூ.65,817 கோடியில் Business.. யார் இந்த Abhay Soi?
இந்தியாவில் இரண்டாவது அதிக மருத்துவமனைகள் கொண்ட நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபரை பற்றி பார்க்கலாம்.
வெற்றிகரமான தொழிலை நடத்தி வரும் தொழிலதிபர்கள் பலரும் வேறொரு நிறுவனங்களில் பணிபுரிபவர்களாவே உள்ளனர்.
அந்தவகையில், வேறொரு நிறுவனத்தில் பணிபுரிந்துவிட்டு அதிக மருத்துவமனைகள் கொண்ட நிறுவனத்தை உருவாக்கிய அபய் சாய் (Abhay Soi) -யை பற்றி தான் பார்க்க போகிறோம். இவர் மேக்ஸ் ஹெல்த்கேர் கல்வி நிறுவனத்தின் (MHIL) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக உள்ளார்.
யார் இவர்?
அபய் சாய் (Abhay Soi), டெல்லி பல்கலைகழகத்தைச் சேர்ந்த புனித ஸ்டீபன் கல்லூரியில் கலைப் பிரிவில் பட்டம் பெற்று, பெல்ஜியம் நாட்டிலுள்ள ஐரோப்பிய பல்கலைகழகத்திலிருந்து எம்பிஏ பட்டம் பெற்றார். இவர் தொடக்கத்தில் நிதித்துறை சார்ந்த நிறுவனங்களில் தான் பணியாற்றி வந்துள்ளார்.
முதன்முதலாக Arthur Andersen நிறுவனத்தில் நிதி தொடர்பான தொழில் மறுசீரமைப்பு துறையில் பணியாற்றினார். இதன்பின்னர், E&Y மற்றும் KPMG போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் தலைவராக இருக்கும் MHIL நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.65,817 கோடி ஆகும். இது இந்தியாவிலேயே அதிக மருத்துவமனைகளை கொண்ட இரண்டாவது பெரிய நிறுவனமாகும். அபய் சாய் (Abhay Soi) -ன் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.15,010 கோடியாகும்.
ரூ.65,817 கோடி மதிப்பில் நிறுவனம்
பல நிறுவனங்களில் வேலை செய்த Abhay Soi 2010 -ம் ஆண்டில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தார். அப்போது, நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த டெல்லியைச் சேர்ந்த 650 படுக்கை கொண்ட மருத்துவமனையை விலைக்கு வாங்கினார்.
பின்னர், சொந்தமாக ரேடியண்ட் லைஃப் கேர் என்ற மருத்துவமனையை 10 ஊழியர்களோடு தொடங்கினார். இதனைத்தொடர்ந்து, 2020 -ம் ஆண்டு ரேடியண்ட் லைஃப் கேர் மேக்ஸ் நிறுவனத்தோடு இணைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் கீழ் 17 இடங்களில் 3500 படுக்கைகள் கொண்ட 12 மருத்துவமனைகள் மற்றும் 5 சுகாதார மையங்கள் உள்ளன.
இவர் ரேடியண்ட் நிறுவனம் தொடங்குவதற்கு முன்பாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் Special Situations Private Equity Fund என்ற நிறுவனத்தை நண்பர்களுடன் நடத்தி வந்தார்.இதன் மூலமாக சுரங்கத் துறை, நிதி சேவைகள், விவசாய தொழில்கள், சில்லறை வணிகம், டெக்ஸ்டைல்ஸ், சிறப்பு ரசாயனங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |