பவர்பிளேயில் 105 ரன்! 18 பந்துகளில் அரைசதம்..வேட்டையாடிய அபிஷேக் ஷர்மா (வீடியோ)
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அபிஷேக் ஷர்மா வாணவேடிக்கை
நியூ சண்டிகரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்து வருகிறது.
ಮೈದಾನದ ಮೂಲೆ ಮೂಲೆಗೂ ಸಿಕ್ಸರ್ ಮಳೆ ಹರಿಸಿದ Abhishek Sharma, ಕೇವಲ 18 ಬಾಲ್ಗಳಲ್ಲಿ ಅರ್ಧಶತಕ ಸಿಡಿಸಿದ್ದಾರೆ! 🫡🔥
— Star Sports Kannada (@StarSportsKan) April 11, 2026
ವೀಕ್ಷಿಸಿ | #TATAIPL2026 👉 #PBKSvsSRH | LIVE NOW | ನಿಮ್ಮ Star Sports ಕನ್ನಡ & JioHotstar ನಲ್ಲಿ. #TATAIPL pic.twitter.com/jPIluC9RwP
நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்ய, ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினர். குறிப்பாக அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) சிக்ஸர்களை பறக்கவிட்டு வாணவேடிக்கை காட்டினார்.
இரண்டாவது அதிவேக அரைசதம்
இதன்மூலம் அவர் 18 பந்துகளிலேயே அரைசதம் கடந்தார். இது ஐபிஎல்லில் அவரது இரண்டாவது அதிவேக அரைசதம் ஆகும்.
மொத்தம் 28 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக், 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 74 ஓட்டங்கள் விளாசினார்.
ட்ராவிஸ் ஹெட் 23 பந்துகளில் 38 ஓட்டங்கள் (1 சிக்ஸர், 5 பவுண்டரிகள்) குவித்து ஆட்டமிழந்தார். இவர்களது கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 49 பந்துகளில் 120 ஓட்டங்கள் குவித்தது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |