35 பந்தில் சதமடித்த அபிஷேக்! நொறுங்கிய கோஹ்லி சாதனை..தொடரை வென்ற இந்தியா
Abhishek sharma most t20 hundreds: அபிஷேக் ஷர்மா சதம் விளாச இந்திய அணி டி20 தொடரைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து 198 ஓட்டங்கள்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி வெல்லிங்டனில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து 198 ஓட்டங்கள் எடுத்தது. டேர்ல் மிட்செல் 89 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய இந்திய அணி 13.2 ஓவர்களில் 199 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 38 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 113 ஓட்டங்கள் விளாசினார். வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் 45 ஓட்டங்கள் விளாசினார்.

அதிக சதம் விளாசியவர்கள்
இப்போட்டியில் சதம் விளாசியதன் மூலம் ஆடவர் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய விராட் கோஹ்லி, வார்னர், டி காக் ஆகியோரை அபிஷேக் ஷர்மா முந்தினார்.

டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 11 சதங்கள் மூலம் அபிஷேக் ஷர்மா 3வது இடத்தில் உள்ளார்.
மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 22 சதங்களுடன் முதலிடத்திலும், பாபர் அஸாம் 13 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
