ஐசிசி தரவரிசையில் எந்த வீரரும் செய்யாத சாதனையை படைத்த அபிஷேக் சர்மா
சர்வதேச T20 தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நடந்து முடிந்த ஆசிய கோப்பை தொடரில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா 7 போட்டிகளில் விளையாடி, 314 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.
அபிஷேக் சர்மா சாதனை
இதன் மூலம், 931 புள்ளிகள் பெற்று T20 துடுப்பாட்ட வீரர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் அபிஷேக் சர்மா.
இதற்கு முன்னர் T20 துடுப்பாட்ட வீரர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகள் பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.
தற்போது அபிஷேக் சர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து வீரர் பில் சால்ட் 2வது இடத்திலும், திலக் வர்மா 3வது இடத்திலும், ஜோஸ் பட்லர் 4வது இடத்திலும் உள்ளனர். இலங்கை வீரர் பதும் நிசங்க 2 இடம் முன்னேறி, 5வது இடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |