மைதானத்தில் சண்டையிட்டு கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஸ் ரதி; தண்டனை வழங்கிய ஐபிஎல் நிர்வாகம்
அபிஷேக் சர்மா மற்றும் திக்வேஸ் ரதி மைதானத்தில் சண்டையிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த RR
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதிக்கொண்டன.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டம் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் அரைசதம் அடித்து அசத்தினர்.
தொடர்ந்து 206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 206 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஏற்கனவே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி, இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பை பறித்தது.
மைதானத்தில் மோதல்
இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக ஆடி 20 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்தார். 7.3 ஓவரில் திக்வேஷ் ரதி வீசிய பந்தில் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார்.
Kuch log hote hain jinhe bina baat ke Attitude hota hai, ye Digvesh Rathi vahi banda hai pic.twitter.com/1C6uvjlSXY
— Prayag (@theprayagtiwari) May 19, 2025
அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டை கைப்பற்றிய திக்வேஷ் ரதி, தனது வழக்கமான பாணியில் அபிஷேக்கை பார்த்து கையை அசைத்தவாறு கொண்டாடினார்.
இதனை பார்த்து ஆத்திரமடைந்த அபிஷேக் சர்மா, முடியை பிடித்து தூக்கி விடுவேன் என்பது போல் சைகை காட்டுவார். இதனால் இருவருக்குமிடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
Lit Abhishek Sharma 🗿🥵🔥 pic.twitter.com/zyBhiQxByJ
— Antara (@AntaraonX) May 19, 2025
சகவீரர்கள் மற்றும் நடுவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஐபிஎல் நிர்வாகம், திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளியும் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமும் விதித்தது.
திக்வேஷ் ரதி ஏற்கனவே 3 தகுதி இழப்பு புள்ளி பெற்றுள்ளதால், அடுத்த ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபிஷேக் ஷர்மாவிற்கு 2 தகுதி இழப்பு புள்ளியும், போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |