முதல் ஓவரிலே அதிக சிக்ஸர்கள் - ரோஹித்தின் சாதனையை சமன் செய்த அபிஷேக் சர்மா
abhishek sharma equal rohit sharma record as more sixes in 1st over: சர்வதேச T20 கிரிக்கெட்டில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.
ஆசிய அளவில் அபிஷேக் சர்மா படைத்த சாதனை
டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் T20 போட்டியில் 157 என்ற இலக்கை 13.4 ஓவர்களில் எட்டிப்பிடித்த இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

32 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் விளாசி 84 ஓட்டங்கள் குவித்த அபிஷேக் சர்மா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதன் மூலம் T20 போட்டிகளில் மொத்தமாக 6,000 ஓட்டங்களை கடந்துள்ள அபிஷேக் சர்மா, ஆசிய அளவில் அதிவேகமாக 6,000 ஓட்டங்களை கடந்துள்ள வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அபிஷேக் சர்மா, வெறும் 3,420 பந்துகளில் 6,000 டி20 ஓட்டங்களை எட்டியுள்ளார். இதன் மூலம், உலகளவில் அதிவேகமாக 6,000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்தின் ஃபின் ஆலன் 3,386 பந்துகளில் 6,000 டி20 ஓட்டங்களை எட்டி முதலிடத்தில் உள்ளார். ஆண்ட்ரே ரஸ்ஸல் {3,550 பந்துகள்), டிம் டேவிட் (3,681) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள்
மேலும், சர்வதேச T20 கிரிக்கெட்டில் 250க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் உடன் அபிஷேக் சர்மா அரைசதம் அடித்தது இது 3வது முறையாகும்.
இதன் மூலம் இந்த சாதனையை அதிகமுறை செய்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சூர்யகுமார் யாதவ் இந்த சாதனையை 2 முறை நிகழ்த்தியுள்ளார்.

இதே போல் சர்வதேச T20 கிரிக்கெட்டில் இன்னிங்ஸின் முதல் ஓவரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை அபிஷேக் சர்மா சமன் செய்துள்ளார்.
இருவரும் முதல் ஓவரில் 12 சிக்ஸர்கள் அடித்துள்ளனர். ரோஹித் சர்மா 401 பந்துகளை எதிர்கொண்டு 12 சிக்ஸர்கள் அடித்த நிலையில், ரோஹித் சர்மா 152 பந்துகளை எதிர்கொண்டு 12 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.