புதிய உலக சாதனைப் படைத்த அபிஷேக் ஷர்மா! சர்வதேச அளவில் முதல் வீரர்
டி20யில் குறைந்த பந்துகளில் 50 சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை அபிஷேக் ஷர்மா படைத்துள்ளார்.
அதிவேக சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா (Abhishek Sharma) 39 பந்துகளில் 74 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இதன்மூலம் அவர், சிக்ஸர்கள் விளாசியதில் அதிவேக சாதனை படைத்த முதல் வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
அதாவது, முழு உறுப்பினர் அணிகளில் குறைந்த பந்துகளில் 50 சிக்ஸர்களை அடித்த வேகமான வீரர் இவர்தான்.
இதற்கு முன் மேற்கிந்திய தீவுகளின் எவின் லூயிஸ் (Evin Lewis) 366 பந்துகளில் 50 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.
தற்போது அபிஷேக் ஷர்மா 50 சிக்ஸர்களை 331 பந்துகளில் அடித்து மிரட்டியுள்ளார். மூன்றாவது இடத்தில் ஆந்த்ரே ரஸல் (409 பந்துகள்) உள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஸஸாய் 492 பந்துகளிலும், சூர்யகுமார் யாதவ் 510 பந்துகளிலும் 50 சிக்ஸர்கள் அடித்திருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |