இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவு - அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா காயம்
அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா காயமடைந்துள்ளது, இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டி
2025 ஆசிய கோப்பை தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி, நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் மோத உள்ளது.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், முதல் முதலாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளதால், இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் முக்கிய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா, இறுதிப்போட்டிக்கு முன்னர் காயமடைந்துள்ள விடயம் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஹர்திக் பாண்டியா, அபிஷேக் காயம்
நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில், ஹர்திக் பாண்டியா முதல் ஓவரில், மென்டிஸை ஆட்டமிழக்க செய்வார்.
அதன் பிறகு, இடது காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அந்த போட்டியில் பந்து வீசவில்லை. மைதானத்தை விட்டு வெளியேறினார்.
அதேபோல், 9வது ஓவரிலும் தசை பிடிப்பு காரணமாக அபிஷேக் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறினார்.
இது குறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், "ஹர்திக் பாண்டியா மற்றும் அபிஷேக் சர்மா தசைபிடிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டியா இன்று இரவும் நாளை காலையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
அதன் பின்னரே அவர் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும். அபிஷேக் சர்மா தற்போது நலமுடன் உள்ளார். மேலும், இறுதிப்போட்டிக்கு தயாராவதற்கு அவர்கள் நல்ல ஓய்வு தேவை, எனவே பயிற்சியில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா இந்த தொடரில், 4 போட்டிகளில் விளையாடி,48 ஓட்டங்கள் குவித்து, 4 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
அபிஷேக் சர்மா, 6 போட்டிகளில் விளையாடி 309 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |