iPhone Air வடிவமைப்பிற்கு பின்னால் இருக்கும் நபர்., யார் இந்த அபிதுர் சவுத்ரி?
Apple புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள iPhone Air வடிவமைப்பிற்கு பின்னால் இருக்கும் அபிதுர் சவுத்ரி குறித்து இங்கே பார்க்கலாம்.
Apple நிறுவனம் இதுவரை வெளியிட்ட iPhone மொடல்களை விட மிகச் சிறிய மற்றும் நவீன தொழில்நுட்பம் கொண்ட iPhone Air-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மொடலின் வடிவமைப்பிற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர் வங்காள தேச வம்சாவளியைச் சேர்ந்த industrial designer அபிதுர் சவுத்ரி.
இவர் Loughborough பல்கலைக்கழகத்தில் Product Design துறையில் கல்வி கற்றவர்.
Apple Park-ல் நடைபெற்ற Awe Dropping நிகழ்வில் CEO Tim Cook-ன் அறிமுகத்திற்கு முன், அபிதுர் சவுத்ரி மேடையில் தோன்றினார்.
அவரது அமைதியான மற்றும் நம்பிக்கை நிறைந்த அணுகுமுறை, iPhone Air-ஐ "பாராடாக்ஸ் போல - நம்பமுடியாத அளவிற்கு மென்மையானது" என விவரித்தார்.
Titanium Body, முழு நாளும் நீடிக்கும் பேட்டரி மற்றும் futuristic design ஆகியவை இந்த மொடலின் சிறப்பம்சங்கள் ஆகும்.
அபிதுர் தனது உதொழில்நுட்ப பயணத்தை Cambridge Consultants மற்றும் Curventa போன்ற நிறுவனங்களில் internship மூலம் தொடங்கினார்.
பின்னர் Layer எனும் லண்டன் நிறுவனத்தில் Industrial Designer-ஆகப் பணியாற்றினார். அவரது திறமையை பல விருதுகள் உறுதிப்படுத்துகின்றன. அதில் 3D Hubs Student Grant குறிப்பிடத்தக்க விருதாகும்.
iPhone 17 Air மோதலில் உள்ள முக்கிய அம்சங்களை வடிவமைத்ததற்காக, அபிதுர் சவுத்ரியை உலகம் முழுவதும் உள்ள Apple ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில், iPhone 17 Air 256GB மொடலின் விலை ரூ.1,19,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Abidur Chowdhury Apple designer, iPhone Air launch 2025, Apple iPhone Air features, Bangladeshi designer Apple, iPhone Air titanium body, Apple industrial design team, iPhone Air A19 Pro chip specs, Apple September event highlights, iPhone Air camera specs, Apple iPhone Air price India