பஹல்காம் தாக்குதல் திரைத்துறையின்மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம்
பஹல்காம் தாக்குதல் திரைத்துறையின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், பாகிஸ்தான் நாட்டவர் ஒருவர் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஒன்று இந்தியாவில் வெளியிடப்பட அனுமதியளிக்கப்படாது என இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திரைப்படம் வெளியாக அனுமதி மறுப்பு
பாகிஸ்தான் நாட்டவரான ஃபகாத் கான் என்பவரும், இந்திய நடிகையான வாணி கபூர் என்பவரும் நடித்துள்ள அபீர் குலால் என்னும் ஹிந்தி திரைப்படம் வெளியாக இருந்தது.
அபீர் குலால், கான், பாலிவுட்டில் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும்.
ஆனால், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டவரான கான் நடித்துள்ள திரைப்படம் இந்தியாவில் வெளியாகாது என இந்திய இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், அபீர் குலால் திரைப்படத்தின் பாடல்கள் யூடியூபில் வெளியாகியிருந்த நிலையில், அந்த பாடல்களும் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.