பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கும் போட்டியாளர் இவர் தான்! வெளியான முக்கிய தகவல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் அபிஷேக் ரீ எண்ட்ரி கொடுப்பதாகவே தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த மாதம் கோலாகலமாக தொடங்கியது.
இந்த முறை பிக்பாஸ் சீசனில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். நாளுக்கு நாள் நிகழ்ச்சியில் போட்டிகள் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்களுக்குள் வன்மம் தொடங்கிவிட்டது.
இதனால் ஒருவருக்கொருவர் கடும் கோபத்திலும் வன்மத்திலும் தாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்து எந்த போட்டியாளர்களுக்குள் கலவரம் வெடிக்க போகும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.
#Day47 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/U9IIxsMSFW
— Vijay Television (@vijaytelevision) November 19, 2021
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் பிரபலம் ஒருவர் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்துள்ள புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது வைல்ட் கார்டு என்ட்ரி ஆக ஒரு பிரபலம் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அவருடைய முகத்தை காண்பிக்காமல் பாக்சில் இருந்து அவர் வெளியே வருமாறு புரோமோ வெளியாகி இருக்கிறது. அவர் வேறு யாரும் இல்லை பிக் பாஸ் 5 வது சீசனில் இருந்து வெளியேறிய அபிஷேக் தான் என்று கூறப்படுகிறது. அவர் தான் பிக் பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைந்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.