இறுதி கட்டத்தை நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் முடிவு: தீவிர கண்காணிப்பில் பெப்பரல் அமைப்பு
இலங்கை தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தலாக நேற்றைய தினம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் அமைந்தது.
ஜனாதிபதி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் பெப்பரல் அமைப்பு அதனை முழுமையாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அதன்படி 54 வாக்கு எண்ணும் நிலையங்களில் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பெப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணிகள்
வாக்குகள் எண்ணுவதினை கண்காணிக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நிலையங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் மொபைல் கண்காணிப்பு மூலம் கண்காணிப்புகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சிறு சிறு குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரையில் தேர்தல் பணிகள் அமைதியாகவே இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.