அபுதாபியில் கோர சாலை விபத்து: கேரளாவை சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
அபுதாபியில் நடந்த கார் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்து
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் துபாயில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் அபுதாபியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு தங்களுடைய காரில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அபுதாபி-துபாய் சாலையில் அப்துல் லத்தீப் கார் வந்து கொண்டிருந்த போது ஷஹாமா என்ற இடத்திற்கு அருகில் அவர்களது கார் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்து சம்பவத்தில் அப்துல் லத்தீப்பின் மனைவி ருக்சானா, குழந்தைகள் ஆஷாஸ்(14), அம்மார்(12), அயாஷ்(5) ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இவர்களுடன் பயணம் செய்த அவர்களின் வீட்டு பணிப்பெண் புஷ்ராவும் விபத்தில் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அப்துல் லத்தீப் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
விபத்தை அடுத்து, விபத்தில் உயிரிழந்த அப்துல் லத்தீப்பின் மனைவி மற்றும் குழந்தைகளின் உடல்களை துபாயிலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வருவதாக கேரளாவில் உள்ள லத்தீப்பின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |