காலின் முன்ரோ சரவெடி: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்திய அபு தாபி நைட் ரைடர்ஸ்
Abu dhabi knight riders beat sharjah warriorz by 3 runs: அபு தாபி நைட் ரைடர்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஷார்ஜா வாரியார்ஸை வீழ்த்தியது.
இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸை, 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபு தாபி நைட் ரைடர்ஸ் வீழ்த்தியது.
213 ஓட்டங்கள்
ஷார்ஜா வாரியர்ஸ், அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டி அபு தாபியில் நடந்தது.
முதலில் ஆடிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது. காலின் முன்ரோ 52 பந்துகளில் 80 ஓட்டங்களும், ஃபின் ஆலன் 26 பந்துகளில் 53 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் பவுல் வால்டர் 24 ஓட்டங்களும், ஜேம்ஸ் வின்ஸ் 19 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டிம் செய்பெர்ட் 49 ஓட்டங்கள் விளாசினார்.
ரஸா, ஜேம்ஸ் போராட்டம்
அதன் பின்னர் அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா, ஜேம்ஸ் ரூவ் அதிரடி ஆட்டத்தில் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இருவரும் அரைசதம் விளாசிய போதும், 3 ஓட்டங்களில் ஷார்ஜா வாரியர்ஸ் வெற்றியைத் தவற விட்டது.
சிக்கந்தர் ரஸா (Sikandar Raza) 24 பந்துகளில் 51 ஓட்டங்களும், ஜேம்ஸ் ரூவ் (James Rew) 28 பந்துகளில் 57 ஓட்டங்களும் விளாசினர்.
