தவெக 2வது மாநில மாநாடு.. 100 அடி கொடிக்கம்பம் சரிந்து விழுந்து விபத்து
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு நாளை மதுரை பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
மாநாட்டை நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் என பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது.
கலைநிகழ்ச்சிகளுக்கு பிறகு 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விழா மேடைக்கு வருகிறார்.
இதனைதொடர்ந்து மேடை முன்பு அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் விஜய் நடந்து சென்று தொண்டர்களை சந்திக்கிறார்.
பின்னர் மேடையில் நின்றபடி கட்சி கொடியை ரிமோட் மூலம் விஜய் ஏற்றுவதை தொடர்ந்து மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.
இறுதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பேச்சுடன் விழா நிறைவு பெறுகிறது.
மாநாட்டிற்க்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது, கிரேன் மூலம் கொடிக்கம்பம் நிறுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில் பெல்ட் திடீரென அறுந்ததில், கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கொடிக்கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்து கார் நொறுங்கி நிலையில் இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |