குடிகார சாரதி ஏற்படுத்திய விபத்தில் பிள்ளைகளை இழந்த தந்தை: தந்தையர் தினத்தில் எடுத்த அதிர்ச்சியளிக்கும் முடிவு
கனடாவில், மதுபானம் அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய சாரதி ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் தனது மூன்று பிள்ளைகளையும் இழந்த தந்தை ஒருவர், தந்தையர் தினத்திற்கு மறுநாள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு, ஒன்ராறியோவிலுள்ள Vaughan என்னும் இடத்தில், Marco Muzzo என்ற நபர் மது அருந்திவிட்டு தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் Edward Lake, Jennifer Neville-Lake தம்பதியரின் பிள்ளைகளான Daniel (9), Harrison (5), Milly (2), மற்றும் பிள்ளைகளின் தாத்தாவான Gary Neville (65) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் என்பதால் தன் பிள்ளைகளின் கல்லறைகளைக் காட்டும் புகைப்படம் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்த Jennifer, 2022 தந்தையர் தினம், இது உண்மையாக இருக்கக்கூடாது, உண்மையாக இருக்கவும் முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
The eyes he shared with Harry are forever closed
— Jenn Neville-Lake (@isda1979) June 21, 2022
Daniel's curls will never shine in the sunlight again
I will never see Milly's shy smile creep across his lips anymore
My children's father, Edward Lake, has joined our kids so they can play together, forever.
Mahal kita, Edward. pic.twitter.com/4nHREvd9Xe
அடுத்த நாள், Edward தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.
திங்கட்கிழமை Jennifer மீண்டும் வெளியிட்ட ட்வீட் ஒன்றில், என் பிள்ளைகளின் தந்தையும், தன் பிள்ளைகளுடன் நிரந்தரமாக இணைந்திருப்பதற்காக அவர்களுடன் சென்றுவிட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
Father's Day 2022
— Jenn Neville-Lake (@isda1979) June 20, 2022
This shouldn't be real
It can't be pic.twitter.com/ODeHE12cJF
Marcoவுக்கு தண்டனை விதிக்கப்பட்ட அன்று, தான் தன் பிள்ளைகளை இழந்ததிலிருந்து தற்கொலை எண்ணங்களுடன் போராடுவதாக குறிப்பிட்டிருந்தார் Edward. அவர் சொன்னதுபோலவே தற்கொலை செய்துகொண்டுள்ளார் அவர்.
ஆனால், பிள்ளைகளை பலிகொண்ட Marco, 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முழுமையான ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
This evening I was very saddened to learn of the tragic death of Ed Lake.
— Chief Jim MacSween (@chiefmacsween) June 20, 2022
The losses to the Neville-Lake family are heart wrenching.
YRP stands with our friend Jennifer and members of both families. May you find strength in the support of your community.