நயன்தாரா திருமணம் நடைபெற்ற இடம் அருகே பரபரப்பு! அடுத்தடுத்து 3 சம்பவங்கள்
நயன்தாரா திருமணம் நடைபெற்ற இடம் அருகே அடுத்தடுத்து 3 விபத்து நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரபலங்கள் மட்டும் வரவேற்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது.
இந்த நிலையில் திருமணம் நடைபெற்ற ஈசிஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பிற்கு 100க்கும் மேற்பட்ட பொலிசார் நிற்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த சாலையில் பல்வேறு இடங்களில் விபத்து ஏற்பட்டது. இரண்டு கார்கள் வெவ்வேறு இடங்களில் மோதி விபத்துக்கு உள்ளாகின.
அதேபோல் இன்னொரு இடத்தில் கார் ஒன்று சிறிய ரக டெம்போவில் மோதி விபத்துக்கு உள்ளானது. போக்குவரத்து நெரிசலால் இந்த விபத்து ஏற்பட்டது.
மேலும் திருமணம் நடைபெற்ற மண்டபத்திற்கு 100 மீட்டர் வெளியே பெண்ணின் கார் ஒன்றில் இளைஞர் ஒருவர் காரை விட்டு தவறுதலாக மோதினார். ஈசிஆர் என்பதால் வேகமாக வந்தவர்.. திடீரென மண்டபம் அருகே இருந்த கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.
இதனால் அவர் பிரேக் போட முயன்று உள்ளார். ஆனாலும் கார் வந்த வேகத்தில், முன்னாள் இருந்த பெண் ஒருவரின் எஸ்யுவி ரக காரில் சென்று பளார் என்று மோதியது.
இதையடுத்து காரில் இருந்து வெளியே வந்த பெண்.. விபத்து ஏற்படுத்திய நபரை பிடித்து, கெட்ட வார்த்தைகளால் கடுமையாக கேள்வி எழுப்பினார், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அப்பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
On a scale of 10…
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
She’s Nayan & am the One ☝️☺️??
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️?? #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F