சுவிட்சர்லாந்தில் தீவிரமாக தேடப்பட்டுவரும் ஆப்கன் நாட்டவர்
சுவிட்சர்லாந்தில் சிறார் துஸ்பிரயோக வழக்கில் சிக்கியுள்ள ஆப்கான் நாட்டவர் தொடர்பிலான நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
ஆர்காவ் மாநிலத்தின் Brugg மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த வாரம் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த 32 வயது ஆப்கானிஸ்தான் நாட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.
சரவ்தேச அளவில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 12 அல்லது 13 வயதுடைய இரு சிறுமிகளையும் இதே வயதுடைய ஒரு சிறுவனையும் பல முறை குறித்த நபர் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கியுள்ளார்.
சம்பவம் நடக்கும் போது, குறித்த சிறுவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆப்கன் நாட்டவரின் துணைவியின் மகன் என கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பில் அரசு தரப்பு சட்டத்தரணிகள் குறித்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறையும் பத்தாண்டு காலம் நாட்டைவிட்டு வெளியேற்றவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நவம்பர் 2ம் திகதி மீண்டும் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது. அப்போதும் அவர் நீதிமன்றத்தில் பங்கேற்கவில்லை எனில், அவர் இல்லாமலையே விசாரணை உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.