இந்திய வம்சாவளி ஐ.எஸ் தீவிரவாதியை நாடுகடத்த முடிவு: வெளிவரும் புதிய தகவல்
அவுஸ்திரேலிய அரசால் ஒருகாலத்தில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நீல் பிரகாஷ் என்ற ஐ.எஸ் தீவிரவாதியை நாடுகடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதி நீல் பிரகாஷ்
அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ள ஐ.எஸ் தீவிரவாதி நீல் பிரகாஷ் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். மெல்போர்னில் பிறந்த முன்னாள் ராப் பாடகரான நீல் பிரகாஷ் 2014ல் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து ஆதரவளித்ததாகக் கூறப்படும் ஆறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.
31 வயதான பிரகாஷ் தற்போது சிரியாவுக்கு பயணப்பட்டுள்ளது தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே வடக்கு பிரதேசத்தில் இருந்து விக்டோரியாவுக்கு நாடுகடத்தும் முடிவுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் 9ம் திகதிக்கு முன்னர் பிரகாஷ் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிபதி எலிசபெத் மோரிஸ் தீர்ப்பளித்துள்ளார்.
இருப்பினும், அவுஸ்திரேலிய ஃபெடரல் பொலிஸ் மற்றும் விக்டோரியா பொலிஸ் அதிகாரிகள் கூட்டாக அவரை காவலில் எடுத்து மெல்போர்னுக்கு அழைத்துச் செல்லும் வரை அவர் டார்வினில் காவலில் இருப்பார் என்றே தெரியவந்துள்ளது.
பிரகாஷ் கொல்லப்பட்டதாக தகவல்
விக்டோரியாவில் அவர் கொண்டுசெல்லப்பட்டதும் அவர் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் பதியப்படும். விக்டோரிய அதிகாரிகள் அவரை அடையாளம் காணும் நடவடிக்கைகளை முடித்துள்ளனர்.
Australian Federal Police
துருக்கியில் கைது செய்யப்பட்ட நீல் பிரகாஷ் வெள்ளிக்கிழமை தனியார் விமானம் மூலம் வடக்கு பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டார். ஈராக்கில் அமெரிக்கா முன்னெடுத்த வான் தாக்குதலில் பிரகாஷ் கொல்லப்பட்டதாக 2016ல் தகவல் ஒன்று வெளியானது.
ஆனால், அதன் அடுத்த ஆண்டு, அவுஸ்திரேலிய அதிகாரிகளால் பிரகாஷ் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் இருந்து ஃபிஜி நாட்டில் குடியேறிய தந்தைக்கும் கம்போடிய நாட்டவரான தாயாருக்கும் மெல்போர்ன் நகரில் பிறந்த நீல் பிரகாஷ், ஃபிஜி நாட்டில் குடியுரிமை கோரவில்லை எனவும், அவரை அந்த நாடு ஏற்க மறுத்துள்ளது எனவும் கூறப்படுகிறது.