நடிகர் சைஃப் அலிகான் வீட்டில் திருட சென்றது இதற்காக தான்- குற்றவாளி பகீர் வாக்குமூலம்
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜன16ஆம் திகதி நள்ளிரவில் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றார்.
கொள்ளையன் வந்ததை பார்த்த வீட்டு பணியாளர்கள் அவரை தடுக்க முயன்ற போது அங்கு வந்த சைஃப் அலிகானையும் அந்த நபர் 6 முறை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாகக் கூறப்படும் நபர் மும்பை தானேவில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், பிடிபட்ட நபர், வங்கதேசத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளதாகவும், அவரது பெயர் முகமது ஷரிஃபுல் இஸ்லாம் ஷேசாத் என்றும் தெரியவந்தது.
பார் மட்டுமின்றி ஹவுஸ் கீப்பிங் ஏஜென்சியிலும் அந்த நபர் பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், பொலிஸ் விசாரணையில், சைஃப் அலிகான் வீட்டில் திருட சென்றது ஏன் என்று கைதான முகமது ஷரிஃபுல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில், "தனது தாயின் மருத்துவ செலவுக்காகவே திருடியதாக" வாக்குமூலம் அளித்துள்ளார்.
வங்கதேசத்தை சேர்ந்த இவர் மாத ஊதியமாக 13 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த நிலையில் அதில் 12 ஆயிரத்தை தாயின் மருத்துவ செலவுக்காக அனுப்பி வந்ததாக தெரிவித்துள்ளார்.
ஏழ்மையின் காரணமாக பணக்கார வீட்டில் கொள்ளையடித்துவிட்டு வங்கதேசத்துக்கு தப்பி விடலாம் என திட்டமிட்டதாகவும், சைஃப் அலிகான் வீடு என்பது தெரியாமல் தான் அந்த வீட்டுக்குள் சென்றதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |