கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல கால்பந்து வீரர்!
கோடிக்கணக்கில் ஜீவனாம்சம் கேட்ட மனைவிக்கு கால்பந்தாட்ட வீரர் அசர்ஃப் ஹக்கிமி ஷாக் கொடுத்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாக் கொடுத்த அசர்ஃப் ஹக்கிமி
மொராக்கோ கால்பந்தாட்ட வீரராக வலம் வருபவர் அசர்ஃப் ஹக்கிமி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில், ஹக்கிமியின் மனைவி ஹிபா விவாகரத்து கேட்டதுடன், ஜீவனாம்சமாக அவரது சொத்தில் பாதியை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.
ஆனால், ஹக்கிமி தன் பெயரில் ஒரு சென்ட் கூட வாங்காமல், சுமார் ரூ.200 கோடிக்கு தாயார் பெயரில் சொத்துக்களை வாங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
தன் மொத்த சொத்துக்களையும், ஜீவனாம்சமாக கொடுப்பதாக அவர் உறுதி கொடுத்திருந்த நிலையில், வழக்கின்போதே மனைவி ஹிபாவிற்கு உண்மை தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.