என்னது? பசு நெய்யை பயன்படுத்தி முகப்பருவை ஈசியா அகற்றிவிடலாமா!
பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.
என்னதான் நம் முகம் கலராகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.
சரும பொலிவிற்கு தீர்வு காண பழங்காலத்திலிருந்தே நெய்யை பயன்படுத்தி வருவது பற்றி உங்களுக்கு தெரியுமா.
பசு நெய்யை சாப்பிட்டு வந்தாலும், பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி வந்தாலும் சருமத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
நெய்யில் நிறைந்துள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் அழகை மேம்படுத்துவதோடு, குறைபாடு இல்லாத சருமத்தை பெறுவதற்கு உதவும்.
சருமத்திற்கு ஏன் நெய்யை பயன்படுத்த வேண்டும்?
பசு நெய்யில் வைட்டமின்கள் A, D, E மற்றும் K போன்றவை மட்டுமல்லாமல் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரித்து, முகப்பருவை போக்குகின்றன.
ஒரு சிலர் சருமத்தில் இருக்கக்கூடிய அழுக்கு, மேக்கப் மற்றும் தூசு போன்றவற்றை அகற்றுவதற்கு பசு நெய்யை நேச்சுரல் கிளன்சராக பயன்படுத்துகின்றனர்.
farmer's almanac
நெய்யை பயன்படுத்தி சருமத்தை சுத்தமாக வைப்பதன் மூலம் முகப்பருக்களை ஏற்படுத்தக்கூடிய அடைப்பட்ட துளைகளை நாம் தவிர்க்கலாம்.
பசு நெய் பாரம்பரியமாகவே அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு காரணமாக ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது முகப்பருவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா வளர்ச்சியை குறைப்பதன் மூலம் முகப்பரு வராமல் தடுக்கிறது.
Shutterstock
பசு நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகிறது. அதோடு இது சருமத்திற்கு ஆழமான ஈரப்பதத்தை அளிக்க உதவுகிறது. போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும் சருமத்தில் முகப்பருவை ஏற்படுத்துவதற்கு காரணமான அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி தடுக்கப்படுகிறது.
பசு நெய்யில் முகப்பரு தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளை ஆற்றக்கூடிய பண்புகளும் காணப்படுகிறது. நெய்யில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஃபேட்டி ஆசிட் திசுக்களை சரி செய்து அவற்றை மீட்டெடுப்பதற்கு உதவுகிறது.
the quint
பசு நெய் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நமது ஹார்மோன் அளவுகள் சீராக பராமரிக்கப்பட்டு, முகப்பரு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நெய்யை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நமது சரும ஆரோக்கியத்திற்கு ஏராளமான பலன்களை அளிக்கும் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |