ரூ.50 லட்சம் மதிப்புள்ள தண்ணீரை குடிக்கிறாரா நீதா அம்பானி?
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, உலகின் விலையுயர்ந்த தண்ணீரை தினமும் அருந்துவதாக தகவல்கள் வெளியாகி வைரலானது.
பெரும்பாலும் நாம் ரூ.10 அல்லது ரூ.20 மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களை வாங்கியிருப்போம்,
ஆனால் உலகத்திலேயே மிக அதிக விலையுயர்ந்த அதாவது ரூ.50 லட்சம் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?
ஆம் Acqua di Cristallo பாட்டிலின் விலை சுமார் 60 ஆயிரம் டொலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி ரூ.50 லட்சம்.
அப்படியென்ன ஸ்பெஷல் என யோசிக்கிறீர்களா?

Acqua di Cristallo
உலகில் சுமார் மூன்று இடங்களில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது, பிஜி மற்றும் பிரான்ஸ் நாடுகளின் இயற்கையான ஊற்று நீரையும், ஐஸ்லாந்தின் பனிப்பாறை நீரையும் மிகச்சரியான அளவில் கலந்து அதனுடன் 5 மில்லிகிராம் அளவிலான 24 காரட் தங்கத் துகள்களையும் சேர்க்கிறார்கள்.
பாட்டிலும் 24 காரட் தங்கத்தால் ஆனது, தண்ணீரில் அதிகளவு ஆல்கைன் இருப்பதால் சருமத்தை பொலிவுபடுத்தும் என்றும், அதிக நீரேற்றத்துடன் வைத்திருக்கும் எனவும் நிறுவனம் கூறுகிறது.

நீதா அம்பானி புகைப்படத்தின் பின்னணி
பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி தினமும் விலைமதிப்புமிக்க தண்ணீரை அருந்துவதாக புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.
ஆனால் அது உண்மை என்பதற்கான போதிய ஆதாரங்கள் ஏதுமில்லை என கூறப்படுகிறது, அவரது கையில் தண்ணீர் பாட்டில் இருப்பது போன்ற புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
சாதாரண மக்களுக்காக அல்லாமல் ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் நபர்களுக்காகவே விலைமதிப்புமிக்க தண்ணீர் பாட்டில் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
